Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது… சூரப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய விசாரணை ஆணையம்!

Webdunia
வியாழன், 6 மே 2021 (08:27 IST)
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா குறித்த முறைகேட்டை விசாரிக்கும் விசாரணை ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சூரப்பா நியமிக்கப்பட்டதில் இருந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இவர் மீது சமீபத்தில் 208 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் குற்றம் சாட்டப்பட்டது. இதனை அடுத்து இது குறித்து விசாரணை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் என்பவரது தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது, அந்த விசாரணை ஆணையம் சூரப்பாவின் ஊழல்புகார் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதாகக் கூற்யிருந்ததது.

இந்நிலையில் இப்போது சூரப்பாவின் பதவிக் காலம் முடிந்துள்ள நிலையில் ‘இனிமேல் தன்னை விசாரிக்க முடியாது’ என அவர் கூறி வந்தார். ஆனால் அவர் எங்கு சென்றாலும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என நீதியரசர் கலையரசன் தெரிவித்துள்ளார். புகார் குறித்த விசாரணை 80% நிறைவு பெற்றுள்ளதாகவும், இன்னும் இரண்டு மூன்று பேரிடம் மட்டுமே இறுதிகட்ட விசாரணை நடத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதுவரை பல்கலைக்கழகத்தில் ஆணையம் கேட்ட ஆவணங்கள் அளிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இப்போது சூரப்பாவுக்கு கலையரசன் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் விசாரணை பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments