கர்நாடக முதலமைச்சர், துணை முதலமைச்சர் யார் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Webdunia
வியாழன், 18 மே 2023 (12:18 IST)
கர்நாடக மாநிலத்தில் தேர்தல் முடிவு வெளியாகி ஒரு வாரத்துக்கு மேலான நிலையில் அந்த மாநிலத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, ஆட்சி அமைக்க முடியாமல் சிக்கலில் இருந்தது என்பதும் குறிப்பாக முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்பதில் குழப்பம் இருந்தது என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக நிலவி வந்த குழப்பம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. சற்றுமுன் காங்கிரஸ் கட்சியின் மேலிடம் கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையாவை தேர்வு செய்துள்ளது. மேலும் துணை முதலமைச்சர் ஆக டி.கே. சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
 
ஒருமித்த கருத்துடன் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் நாளை மறுநாள் கர்நாடக மாநிலத்தில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுவையில் விஜய் - என்ஆர் காங்கிரஸ் கூட்டணியா? உள்துறை அமைச்சர் சந்தேகம்..!

தவெகவில் இணைகிறாரா வைத்திலிங்கம்? தமிழக அரசியலில் பரபரப்பு..!

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments