Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழைய கள்ளக்காதலனுடன் சேர்ந்து புதிய கள்ளக்காதலனை போட்டுத்தள்ளிய அரசு பெண் ஊழியர்

Webdunia
புதன், 1 ஆகஸ்ட் 2018 (11:29 IST)
கலெக்டரின் நேர்முக உதவியாளர் கொலை வழக்கில் கைதாகிய பெண் ஊழியர், பழைய கள்ளக்காதலனுடன் சேர்ந்து புதிய கள்ளக்காதலனான உதவியாளரை கொன்றது அம்பலமாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்த பூபதி கண்ணன்(45) என்பவர் கடந்த 27-ந்தேதி படுகொலை செய்யப்பட்டார்.
 
இவரது படுகொலை குறித்து விசாரித்து வந்த போலீஸார், அவருடன் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த சவுந்தர்யா என்பவரை கைது செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 
சவுந்தர்யாவுக்கு குளித்தளையில் வேலாண்மை துறையில் பணியாற்றி வந்த சுரேஷ் என்பவருடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.
 
சவுந்தர்யாவுக்கு திருமணத்திற்கு முன்பு ஒரு நபரை காதலித்து வந்துள்ளார். சுரேஷுடன் திருமணம் ஆன பிறகும் தன் முன்னாள் காதலனுடன் தொடர்பில் இருந்துள்ளார் சவுந்தர்யா. 
 
இதனையறிந்த சுரேஷ் பலமுறை சவுந்தர்யாவை எச்சரித்தும் அவர் கேட்கவில்லை. இதனால் மனமுடைந்த சுரேஷ் கடந்த 2 வருடங்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டார். கருணை அடிப்படையில், சவுந்தர்யாவிற்கு வேலாண்மை துறையில் டைப்பிஸ்ட் வேலை கிடைத்தது. 
 
இந்நிலையில் சவுந்தர்யாவிற்கு அலுவலகத்தில் வேலைசெய்து வந்த பூபதி பாண்டியனுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது.
 
இதனையறிந்த சவுந்தர்யாவின் முன்னாள் கள்ளக்காதலன், சவுந்தர்யாவை கண்டித்துள்ளார். அதே வேளையில் பூபதிப்பாண்டியனுக்கும் சவுந்தர்யா வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த பூபதிப்பாண்டியன் சவுந்தர்யாவை மிகவும் கடுமையாக திட்டியுள்ளார். 
இதனால் ஆத்திரமடைந்த சவுந்தர்யா நடந்தவற்றை பழைய கள்ளக்காதலனிடம் கூறி, தனது புதிய கள்லக்காதலனான பூபதிப்பாண்டியனை தீர்த்துக் கட்ட திட்டமிட்டார்.
 
இதன்படி கரெக்டாக பிளான் போட்ட அவர்கள், பூபதி பாண்டியனை கொடூரமாக கொலை செய்தனர். போலீஸார் தொடர்ந்து சவுந்தர்யாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புயல் சின்னம்.. 3ஆம் எண் கூண்டை ஏற்ற துறைமுகங்களுக்கு அறிவுறுத்தல்..!

ஏஐ துறை ஆலோசகராக சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்: டிரம்ப் நியமனம்..

ஊழியர்களுக்கு கார், ராயல் என்பீல்ட் வாங்கி கொடுத்த தொழிலதிபர்! - சென்னையில் ஆச்சர்யம்!

எலான் மஸ்க் என் நண்பர்தான்.. அதுக்காக அவர் அதிபராக முடியாது! - ட்ரம்ப் கொடுத்த அதிர்ச்சி பதில்!

விவாகரத்து பெற்ற பணக்காரர்களுக்கு குறி.. 3 பேரை திருமணம் செய்து ரூ.1.21 கோடி மோசடி செய்த இளம்பெண்..!

அடுத்த கட்டுரையில்
Show comments