Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே நேரத்தில் 3 பேரை காதலித்த இளம்பெண்...விபரீதத்தில் முடிந்த உறவு

ஒரே நேரத்தில் 3 பேரை காதலித்த இளம்பெண்...விபரீதத்தில் முடிந்த உறவு
, செவ்வாய், 31 ஜூலை 2018 (10:18 IST)
இளம்பெண் ஒருவர் ஒரே சமயத்தில் 3 வாலிபர்களை காதலித்து ஏமாற்றியது பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்ததால், அவர் தற்கொலை செய்து கொண்டார்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ரெட்டிகுண்டா பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரது மகள் சங்கீதா கல்லூரியில் படித்து வந்தார்.
 
சங்கீதா ஒரே நேரத்தில் தன் கல்லூரியில் படிக்கும் மாணவன் ஒருவனையும், ராணுவத்தில் பணிபுரியும் நபரையும், ஆட்டோ ஓட்டுநரையும் காதலித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இது சங்கீதாவின் காதலர்களுக்கு தெரியவரவே ஆத்திரமடைந்த அவர்கள், சங்கீதா வீட்டின்முன்பு தகராறு செய்துள்ளனர்.
 
தங்களது பெண்ணின் இந்த கீழ்த்தரமான செயலையறிந்த பெற்றோர் சங்கீதாவை சரமாரியாக திட்டினர். இதனால் அவமானமடைந்த சங்கீதா கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். போலீஸார் சங்கீதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் சித்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருணாநிதி உடல்நிலை குறித்து அடுத்த மருத்துவ அறிக்கை எப்போது?