Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துகுடி தொகுதிக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிட்ட தமிழிசை

Webdunia
புதன், 10 ஏப்ரல் 2019 (21:08 IST)
தமிழகத்தின் நட்சத்திர தொகுதிகளில் ஒன்று தூத்துகுடி. இங்கு இரண்டு பெண் நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் அதிமுக கூட்டணி சார்பாகவும் திமுக ராஜ்யசபா எம்பி கனிமொழி திமுக கூட்டணி வேட்பாளராகவும்  போட்டியிடுகின்றனர்.
 
இருவரும் அனல் பறக்கும் பிரச்சாரங்களை செய்து வரும் நிலையில் சற்றுமுன் பாஜக வேட்பாளர் தமிழிசை தூத்துக்குடி தொகுதிக்கு  என தனி தேர்தல் அறிக்கை  ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
 
* தாமிரபரணி ஆற்றின் குறுக்கே மாவடி பண்ணை அருகே அணை கட்ட நடவடிக்கை 
 
* தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு தாமிரபரணி வடிநிலக் கோட்டம் அமைக்க நடவடிக்கை 
 
* திருச்செந்தூர் பாத யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு தனி வழித்தடம் அமைக்க நடவடிக்கை 
 
* தூத்துக்குடி - திருச்செந்தூர் - நெல்லை இடையே மின்பாதை அமைத்து மின்சார ரயில் செல்ல நடவடிக்கை
 
* மத்திய அரசின் மூலம் நிதி பெற்று பெரியதாழையில் ரூ.200 கோடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்
 
* தூத்துக்குடி மாவட்டத்தில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை 
 
* விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்க நடவடிக்கை 
 
* பனைத் தொழில் உற்பத்தி பொருட்களுக்கு தனிசந்தை அமைத்து தொழிலாளர் பிரச்னைக்கு தீர்வு
 
இவ்வாறு தமிழிசை வெளியிட்ட தனி தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments