Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கூட்டணியிலிருந்து பாஜக தாராளமாக விலகலாம்: செம்மலை அறிவிப்பு

Advertiesment
கூட்டணியிலிருந்து பாஜக தாராளமாக விலகலாம்: செம்மலை அறிவிப்பு
, திங்கள், 18 நவம்பர் 2019 (22:05 IST)
அதிமுக கூட்டணியிலிருந்து விலக விரும்பினால் பாஜக தாராளமாக வழங்கலாம் என்றும் அவ்வாறு விலகினால் அதிமுகவிற்கும் எந்த நஷ்டமும் இல்லை என்றும் விலகிப்போகும் பாஜகவிற்கு தான் நஷ்டம் என்றும் முன்னாள் அமைச்சர் செம்மலை கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் விவாதத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செம்மலையிடம், ‘ஒருவேளை அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலகி, ரஜினிக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு கொடுத்தால், அதிமுகவால் உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியுமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது
 
இந்த கேள்விக்கு பதிலளித்த பாஜக அமைச்சர் செம்மலை அதிமுக கூட்டணியில் இன்றுவரை பாஜக ஒரு அங்கமாக உள்ளது. ஒருவேளை நாளை கருத்து வேறுபாடு ஏற்பட்டு கூட்டணியிலிருந்து பிரிந்தால், அதிமுகவுக்கு எந்த நஷ்டமும் இல்லை. பாஜகவுக்கு தான் பெரும் நஷ்டம் ஏற்படும்
 
மத்தியில் பாஜக ஆட்சி, மாநிலத்தில் அதிமுக ஆட்சியில் இருப்பதால் இரண்டு ஆட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. அதற்காக கட்சியும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற அவசியமில்லை. அதிமுகவிடம் இருந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டால் பாஜக தாராளமாக பிரியலாம் . அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்று கூறியுள்ளார் 
 
ஏற்கனவே கழகங்கள் இல்லாத ஆட்சி, என்றும் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்றும் பாஜகவினர் கூறிவரும் நிலையில் முன்னாள் அமைச்சர் செம்மலை இவ்வாறு கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்காவில் இருந்து திரும்பியவுடன் ரஜினியை கண்டித்த ஓபிஎஸ்