Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இருக்கு.. அழகிரிக்கிட்ட ஒரு பவர் இருக்கு! செல்லூர் ராஜூ பேட்டி

இருக்கு.. அழகிரிக்கிட்ட ஒரு பவர் இருக்கு! செல்லூர் ராஜூ பேட்டி
, ஞாயிறு, 9 செப்டம்பர் 2018 (12:30 IST)
அழகிரியை பாராட்டி அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
கருணாநிதியின் மறைவிற்கு பின் திமுகவில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும் என அழகிரி தொடர்ந்து கூறி வருகிறார். அதோடு, தனது பலத்தை நிரூபிப்பதற்காக தனது ஆதரவாளர்களுடன் கடந்த 5ம் தேதி சென்னை சேப்பாக்கம் பகுதியிலிருந்து மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதியின் சமாதி வரை பேரணி நடத்தினார்.
 
அதேபோல், தன்னை இணைத்துக்கொள்ளாவிட்டால் திமுக தொடர் தோல்விகளை சந்திக்கும் என தொடர்ந்து பேட்டிகளில் கூறி வருகிறது. அதேபோல், ஸ்டாலினின் தலைமையையும் அவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
 
இந்நிலையில், இதுபற்றி அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் “ அழகிரியிடம் ஒரு ஆற்றல் இருக்கிறது. அதனால்தான், ஆயிரக்கணக்கானோர் அவர் நடத்திய பேரணியில் கலந்து கொண்டனர். இது அவருக்கு ஆதரவு இருப்பதை காட்டுகிறது” என அவர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குடும்பம் நடத்த வர மறுத்த மனைவி : கத்தியால் குத்திக்கொன்ற கணவன்