Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேரறிவாளன் ஜெயில்ல இருக்கதே என்னாலதான் தெரிஞ்சது! – சீமான் பேச்சால் சர்ச்சை!

Webdunia
வியாழன், 19 மே 2022 (09:11 IST)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளன் நேற்று விடுதலை ஆன நிலையில் அவர் சிறையில் இருப்பதே தன்னால்தான் உலகுக்கு தெரிய வந்ததாக சீமான் கூறியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர் பேரறிவாளன். பின்னர் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. பின்னர் தற்போது உச்சநீதிமன்றம் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். பேரறிவாளன் விடுதலை குறித்து பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “6 மாத காலம் நான் வேலூர் சிறையில் அடைபடுவதற்கு முன்பு முருகன், சாந்தன், பேரறிவாளன் 3 பேரும் வேலூர் சிறையில் இருந்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது. நான் சிறையில் இருந்த 6 மாதத்தில் அவர்களை 50 ஆயிரம் பேர் சந்தித்தார்கள்.

பேரறிவாளனின் விடுதலை மகிழ்ச்சியை விட நம்பிக்கையை தருகிறது” என பேசியுள்ளார்.

ஆனால் சீமான் வேலூர் சிறை செல்வதற்கு முன்பாகவே மூவரும் அச்சிறையில் இருந்தது மக்களுக்கு தெரியும் என்றும், அப்போதே சட்டப்போராட்டங்கள் நடந்து வந்ததாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது நடவடிக்கை எடுக்க திமுக புகார்..!

திருப்பதி நெரிசலில் சிக்கி பலியான தமிழக பெண் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்

பனையூரில் நாளை தமிழக வெற்றி கழக கூட்டம்.. மாவட்ட தலைவர்களுக்கு அழைப்பு..!

பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி திடீரென நிறுத்தி வைப்பு.. பொதுமக்கள் அதிருப்தி..!

திருப்பதியில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு: ஆந்திர அரசு அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments