Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எதிராகவும் போராடுவோம்: சீமான்

Advertiesment
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எதிராகவும் போராடுவோம்: சீமான்
, புதன், 11 ஜூலை 2018 (20:13 IST)
தமிழகத்தில் கடந்த சில மாதங்களக ஒரே போராட்டம் தான் நடந்து வருகிறது. தூத்துகுடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம், மீத்தேன் திட்டத்திற்கு எதிரான போராட்டம், ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டம், 8 வழிச்சாலைக்கு எதிரான போராட்டம் என ஒரே போராட்டமயமாக தமிழகம் இருப்பதால் இந்தியாவில் தொழில் தொடங்க உகந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் பின் தங்கியுள்ளது.
 
இந்த நிலையில் தென்மாவட்டங்களின் கனவுகளில் ஒன்றான எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த அறிவிப்பை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து தமிழக அரசு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடம் தேர்வு உள்பட பலவேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
 
webdunia
இந்த நிலையில் மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையையும் எதிர்ப்போம் என்று சீமான் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். வட இந்தியாவில் இருந்து வரும் மருத்துவர்களுக்கு தமிழ் தெரியாது என்றும் அவர்கள் எப்படி தமிழர்களுக்கு மருத்துவம் செய்ய முடியும் என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் தெரியாத லட்சக்கணக்கான வட இந்தியர்கள் தமிழகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் நிலையில் டாக்டர்களால் வைத்தியம் பார்க்க முடியாது என்று சீமான் சொல்வதை நெட்டிசன்கள் கண்டித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

30 மில்லியன் ஆண்டுக்கு முந்தைய ராட்சத டைனோசரின் புதை படிவங்கள்!