Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வக்கீலுக்கு அரிவாள் வெட்டு...சினிமா துணை நடிகர்கள் கைது

Webdunia
வியாழன், 16 பிப்ரவரி 2023 (18:33 IST)
நெல்லை மாவட்டம் திசையன்விளையில், வக்கீல் ஒருவரை சினிமா நடிகர் உள்ளிட்ட 2 பேரை  போலீஸார் கைது செய்துள்ளார்.

நெல்லை  மாவட்டம் திசையன்விளையில் உள்ள மணலிவிளை என்ற பகுதியில் வசிப்பவர்.ராமகனி. இவரது மகன் சிவரான்(32). வக்கீலுக்கு படித்த இவர், அங்குள்ள பகுதியில் ஹார்ட்வேர் கடையை சொந்தமாக நடத்தி வருகிறார்.

இவர், நேற்று இரவு கடையைப் பூட்டிக் கொண்டிருக்கும்போது,  அவரது கடைக்கு வந்த இரண்டு பேர், அவரை இரும்புக் கம்பியால் தாக்கினர்.

அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடிய சிவராமனை இருவரும் விடாமல் துரத்தினர். 

எனவே ஒரு மளிகைக்கடைக்குள் புகுந்த அவரை துரத்தி வந்தவர்கள் அரிவாளால் கழுத்தில் வெட்ட  முயன்றனர்.

இதிலிருந்து தப்பிக்க தன் கையைத் தூக்கினார் சிவராமன். அதில் வெட்டுப்பட்டது. இதனால், அவருக்கு மணிக்கட்டு துண்டாகிப்போனது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார் சிவராமனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.  இந்ததாக்குதலில் ஈடுபட்ட பிரசாந்த் என்ற சினிமா துணை  நடிகரையும்,முருகனையும் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments