Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 12 April 2025
webdunia

மிரட்டும் கொரோனா: பள்ளி திறப்பை தள்ளிப்போட கோரிக்கை!

Advertiesment
Schools Reopening
, செவ்வாய், 10 நவம்பர் 2020 (09:34 IST)
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 
 
இந்தியாவில் கடந்த மார்ச் முதலாக கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் பண்டிகை காலங்களும் மழை காலமும் நெருங்கியுள்ளன. 
 
இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு முடிவு செய்து நேற்று கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதனிடையே தற்போது தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். 
 
அதாவது தற்போது மழை, குளிர்காலம் என்பதால் கொரோனா அதிகம் பரவக்கூடும் என அச்சப்படுவதால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது. எனவே பள்ளி திறப்பு ஜனவரி மாதம் இருக்க கூடும் என தெரிகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீபாவளியில் பரவும் கொரோனா; 9 மாநிலங்களுக்கு எச்சரிக்கை!