பள்ளி வேனில் ரயில் மோதிய விபத்து! கேட் கீப்பர் காரணம் இல்லையா? - ரயில்வே அளித்த புது விளக்கம்!

Prasanth K
செவ்வாய், 8 ஜூலை 2025 (10:42 IST)

கடலூர் செம்மங்குளம் அருகே பள்ளி வேனில் ரயில் மோதிய விபத்திற்கு காரணம் கேட் கீப்பர் இல்லை என்று ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

 

கடலூர் செம்மங்குளம் அருகே தண்டவாளத்தை பள்ளி வேன் கடக்க முயன்றபோது ரயில் மோதியதில் பள்ளி வேன் இழுத்துச் செல்லப்பட்டு விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில் மின் வயர் அறுந்து விழுந்து ஒருவர் பலியான நிலையில் மேலும் இருவரும் பலியாகியுள்ளனர். பள்ளி மாணவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

ரயில்வே கேட் கீப்பர் கேட்டை மூடாமல் தூங்கியதே விபத்திற்கு காரணம் என கூறும் அப்பகுதி மக்கள் கேட் கீப்பரையும் தாக்கியுள்ளனர். ஆனால் இதுகுறித்து ரயில்வே அளித்துள்ள விளக்கத்தில் கேட் கீப்பர் மட்டுமே காரணமில்லை என கூறப்பட்டுள்ளது.

 

கேட் கீப்பர் கேட்டை மூடச் சென்றபோது கேட்டை திறக்க வேண்டும் என வேன் டிரைவர் வலியுறுத்தியதாகவும், தான் கடந்து செல்லும்வரை கேட்டை மூடக்கூடாது என பள்ளி வேன் டிரைவர் கூறியதுடன், தண்டவாளத்தை கடக்க முயன்றதாகவும், அதனால் விபத்து ஏற்பட்டதாகவும், ரயில்வே முதற்கட்ட விளக்கம் அளித்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments