பெண் காவல்துறை அதிகாரிகளை சர்ச்சைக்குரிய வகையில் பேசியது உள்பட ஒரு சில வழக்குகளில் சிக்கிய சவுக்கு சங்கர் கடந்த சில மாதங்களாக சிறையில் இருக்கும் நிலையில் அவரது உடல்நிலை மோசம் அடைந்து இருப்பதாகவும் அவருக்கு தேவையான மருந்துகளை கொடுப்பதில்லை என்றும் அவரது வழக்கறிஞர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புழல் சிறையில் சவுக்கு சங்கர் சித்திரவதை செய்யப்படுவதாகவும், அவர் சர்க்கரை நோயாளி என்று தெரிந்தும் அதற்கு தகுந்த மருந்துகள் கொடுப்பதில்லை என்றும், சவுக்கு சங்கர் வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்.
சவுக்கு சங்கருக்கு சரியான ஆடைகள் கொடுப்பதில்லை என்றும், படிப்பதற்கு புத்தகம் கொடுப்பதில்லை என்றும், தேவையான மருந்துகள் கொடுப்பதில்லை என்றும், ஒவ்வொரு நாளும் பொய் வழக்கு போட்டு அவரை நீதிமன்றத்திற்கு அலைய விடுகிறார்கள் என்றும் சவுக்கு சங்கர் வெளியில் யாரிடமும் பேச அனுமதியும் கொடுப்பதில்லை என்றும் அடுக்கடுக்காக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் அவரது உடல்நிலை மோசமாகி வருகிறது என்றும், அவர் சர்க்கரை நோயாளி என தெரிந்து அவருக்கு எந்தவிதமான சிகிச்சையும் அளிக்கப்படவில்லை என்றும் அவர் மிகவும் பலவீனமாக இருப்பதாகவும் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.