Publish Date: Wed, 02 Dec 2020 (14:31 IST)
Updated Date: Wed, 02 Dec 2020 (15:22 IST)
சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி சிறை நிர்வாகத்திடம் சசிகலா மனு அளித்துள்ளதாக தகவல்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பாரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிக்கலா கட்டவேண்டிய அபராத தொகையான ரூ.10.10 கோடி நேற்று செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அபராத தொகையை செலுத்தி விட்டதால் சசிகலா தண்டனை காலம் குறைக்கப்பட்டு விரைவில் விடுதலை செய்யப்படுவார் என பேசிக் கொள்ளப்பட்டது.
ஆனால் சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்பட வாய்ப்பு இல்லை என கூறப்பட்டது. இந்நிலையில், சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி சிறை நிர்வாகத்திடம் சசிகலா மனு அளித்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
தண்டனை காலம் ஜனவரி 27 ஆம் தேதியுடன் முடியும் நிலையில் முன்கூட்டியே விடுதலை செய்ய சசிகலா கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
Sugapriya Prakash
Publish Date: Wed, 02 Dec 2020 (14:31 IST)
Updated Date: Wed, 02 Dec 2020 (15:22 IST)