Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா விடுதலை எப்போது? பெங்களூர் சிறை நிர்வாகம் தகவல்

Webdunia
செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (08:33 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று தற்போது பெங்களூர் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, விரைவில் விடுதலை ஆவார் என்று அவ்வப்போது செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் தற்போது பெங்களூர் சிறை நிர்வாகமே சசிகலா விடுதலை குறித்த தகவலை தெரிவித்துள்ளது 
 
பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா வரும் ஜனவரியில் விடுதலை ஆகிறார் என பெங்களூர் சிறை நிர்வாகம் சற்றுமுன் தெரிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா விடுதலையாவார் என பெங்களூரு நரசிம்ம மூர்த்தி என்பவர் ஆர்டிஐ மூலம் கேட்ட கேள்விக்கு சிறை நிர்வாகம் பதிலளித்துள்ளது இதனை அடுத்து அடுத்த ஆண்டு ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலை ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
சசிகலா விடுதலை தொடர்பாக தகவல் அறியும் உரிமை தகவல் வெளிவந்துள்ளதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து சசிகலா அடுத்த மாதம் ரிலீஸ் ஆவார் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் சசிகலா ரூபாய் 10 கோடி அபராதம் கட்டியே ஆக வேண்டும் என்றும் அவர் அபராத தொகையை கட்ட தவறினால் விடுதலை ஓராண்டு தள்ளிப்போகும் என்று ஆர்டி.ஐ. தகவல் தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சசிகலா விடுதலையாகி சென்னை திரும்பியதும் அதிமுகவில் பெரும் மாற்றம் மற்றும் குழப்பங்கள் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments