எம்ஜிஆர் நினைவிடம் செல்ல சசிகலா, தினகரனுக்கு அனுமதி மறுப்பு!

Webdunia
வெள்ளி, 24 டிசம்பர் 2021 (08:49 IST)
எம்ஜிஆர் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்த சசிகலா மற்றும் தினகரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
அதிமுகவின் நிறுவன தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 38ஆவது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் சென்னை மெரினா பீச்சில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் சென்று அஞ்சலி செலுத்த சசிகலா மற்றும் தினகரன் சார்பில் தனித்தனியாக அனுமதி கேட்கப்பட்டது 
 
ஆனால் இந்த அனுமதிக்கு காவல்துறையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை காரணம் காட்டி எம்ஜிஆர் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்த அனுமதி மறுக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது
 
இதனை அடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் தினகரன் தலைமையில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்திலும் தி நகரிலுள்ள தனது இல்லத்தில் சசிகலாவும் எம்ஜிஆருக்கு அஞ்சலி செலுத்துவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைக்கு மேல கத்தி!.. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?!...

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

அடுத்த கட்டுரையில்
Show comments