1,000-த்தை நெருங்கும் ராயபுரம்: துரத்தி வரும் கோடம்பாக்கம்!!

Webdunia
வெள்ளி, 15 மே 2020 (11:15 IST)
சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 971 பேர் கொரோனாவால் பாதிப்பு என தகவல் வெளியாகியுள்ளது. 
 
தமிழகத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட தகவலின்படி தமிழகத்தில் 447 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 9674 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 447 பேர்களில் சென்னையில் மட்டும் 363 பேர் பாதிக்கப்பட்டவர்கள்.  இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5625ஆக உயர்ந்துள்ளது. 
 
அதிலும் குறிப்பாக சென்னை ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு 1,000ஐ நெருங்குகிறது. ஆம் சென்னை ராயபுரம் மண்டலத்தில் இதுவரை 971 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதனையடுத்து கோடம்பாக்கத்தில் 895 பேருக்கு கொரோனா, திரு.வி.க.நகரில் 699 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எந்த ஷா வந்தாலென்ன? கருப்பு சிவப்பு படை தக்க பாடம் புகட்டும்! முதல்வர் ஸ்டாலின்

ஆசைக்கு அளவில்லை என்பதற்கு அடையாளம் விஜய்”: த.வெ.க. தலைவரை விமர்சித்த அமைச்சர் கோவி. செழியன்

விஜய் போட்டாவ வச்சி என் பொண்ணு வாழ்க்கையே போச்சி!.. அட பாவமே!...

இட்லி, வடை, தோசை சாப்பிடுவது போன்ற ஒரு சாதாரண சந்திப்பு.. விஜய் சந்திப்பு குறித்து பிரவீன் சக்கரவர்த்தி

உபியில் 2.45 கோடி வாக்காளர் படிவங்கள் திரும்ப வரவில்லை.. SIRஆல் பாஜகவுக்கு சிக்கலா?

அடுத்த கட்டுரையில்
Show comments