தமிழக அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை பின்பற்றுமாறு காவல்துறை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள ஒரு சில பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் கொண்டாட சென்னை காவல்துறை தடை விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தமிழக அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை பின்பற்ற காவல்துறை அறிவுறுத்தியது. மேலும் காவல் துறையினர் குறிப்பிட்டுள்ள சில விதிமுறைகள் பின்வருமாறு...
1. வரும் 31.12.2021 அன்று இரவு தமிழ்நாட்டிலுள்ள கடற்கரைகளில் பொதுமக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை.
2. புத்தாண்டு தினத்தில் பொது இடங்களிலும், சாலை ஓரங்களிலும் கூட்டம் கூடுவதையும், இரு சக்கர வாகனங்களில் சுற்றுவதைத் தவிர்க்கவும்.
3. வழிபாட்டுத்தலங்களில் தமிழக அரசினால் அறிவுறுத்தப்பட்ட கோவிட் நடத்தை வழிமுறைகளை பின்பற்றவும்.
4. மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டக் கூடாது. மது அருந்திய ஓட்டுநர்கள் கைது செய்யப்படுவர். அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
5. ஓட்டல்கள் மற்றும் தங்கும் வசதியுடைய உணவகங்கள் தமிழக அரசு வழிகாட்டுதல் நெறிகளின்படி இரவு 11 மணி வரை செயல்படும்.
6. வெளியூர் செல்பவர்கள் பூட்டிய வீட்டினை குறித்து தகவலை தெரிவித்தால், ரோந்து காவலர்கள் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்படும்.
7. அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100,112 என்ற எண்ணையோ அல்லது KAVALAN - SOS செயலியை பயன்படுத்தலாம்.