Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தீர்மானம்!

J.Durai
சனி, 25 மே 2024 (16:12 IST)
திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட அவைத்தலைவர்
பேரூர் தர்மலிங்கம்  தலைமையில் கரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. 
 
இக்கூட்டத்தில் கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு, மத்திய மாவட்டச் செயலாளர்  வைரமணி,வடக்கு மாவட்டகாடுவெட்டி தியாகராஜன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-
 
தீர்மானம் -1
 
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் திருச்சி மத்திய, வடக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை கழகங்களில் கலைஞர் அவர்களின் திருவுருவபடத்திற்கு மாலை அணிவித்து, கழக கொடியேற்றி, இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி, மிகசிறப்பாக கொண்டாடுவது.
 
தீர்மானம் - 2
 
2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி உருவாவதற்கு முழு முதல் காரணமாக திகழ்ந்தவரும் தமிழகத்தில் திமுக மற்றும் தோழமை கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்காக தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிளும் பிரச்சாரம் செய்து மக்களின் மனதை கவர அயராது உழைத்த கழகத்தலைவர் தமிழக முதல்வர்  தளபதி மு.க.ஸ்டாலினுக்கு  திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுகழகத்தின் சார்பில் எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
 
தீர்மானம் - 3
 
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட இந்தியா கூட்டணியில் உள்ள 40 வேட்பாளர்களையும் ஆதரித்து தமிழகம் முழுவதும் தனது பிரச்சாரத்தின் மூலம் வேட்பாளர்களின் வெற்றிக்கு வித்திட்ட திமுகழகத்தின் இளைஞரணி செயலாளரும், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான  உதயநிதி ஸ்டாலினுக்கு திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுகழகத்தின் சார்பில் தனது நெஞ்சார்ந்த நன்றியினையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 
தீர்மானம் - 4
 
தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் வாழ்த்திடும் வகையில் திராவிட மாடல் ஆட்சியின் நாயகன் தளபதி அவர்களின் முதல் மூன்று ஆண்டுகள் ஆட்சி நிறைவடைந்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள தமிழக முதல்வருக்கும்  தமிழக அரசுக்கும் இக்கூட்டம் தனது நெஞ்சார்ந்த நன்றியினையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
 
தீர்மானம் - 5
 
2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டனி கட்சிகளின் வேட்பாளர்களின் வெற்றிகாக அயராது உழைத்த மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் உள்ளிட்ட கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் இக்கூட்டம் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
 
இந்நிகழ்வில் எம்.எல்.ஏக்கள் ஸ்டாலின் குமார், எம்.பி.பழனியாண்டி,    மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஊராட்சி மன்ற தலைவர் தர்மன் ராஜேந்திரன், சேர்மன் துரைராஜ், பகுதிச் செயலாளர்கள்  காஜா மலை விஜய், நாகராஜன், மோகன் தாஸ்,  இளைஞரணி ஆனந்த்,மாவட்ட துணைச் செயலாளர்கள் முத்துச் செல்வம்,   மு.கருணாநிதி    விஜயா ஜெயராஜ், கவுன்சிலர் கலைச் செல்வி ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
மாவட்ட கழக,மாநகர கழக நிர்வாகிகள், தலைமை செயற்க்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி கழக செயலாளர்கள்,வட்டகழக செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்டபிரதிநிதிகள்,மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் மேலும் ஒரு கைது.. சென்னை எம்ஜிஆர் நகரில் பதுங்கி இருந்தாரா?

நீட் முறைகேடு வழக்கு: சிபிஐ வசம் ஒப்படைத்தது மத்திய அரசு

கள்ளக்குறிச்சியில் பலியானவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்வு.. இன்று அதிகாலை ஒருவர் பலி..!

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண்..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

மதுவிலக்கு துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்க.! கள்ள மௌனம் காக்கும் முதல்வர்..! அண்ணாமலை...

அடுத்த கட்டுரையில்
Show comments