Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகர் நடிகைகளின் சம்பளத்தை குறைக்க வேண்டும்- சினிமா சங்க விநியோகஸ்தர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

நடிகர் நடிகைகளின் சம்பளத்தை குறைக்க வேண்டும்- சினிமா சங்க விநியோகஸ்தர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

J.Durai

, செவ்வாய், 21 மே 2024 (14:47 IST)
தி மதுரை - இராமநாதபுரம் பிலிம் டிஸ்டிரிபியூட்டர்ஸ் அசோசியேசன் சங்கத்தின் 2024- 2026 ஆம் ஆண்டு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா மதுரை தனியார் விடுதியில்  நடைபெற்றது.  
 
இதில் கௌரவ தலைவராக ஜி.என்.அன்புச் செழியன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 
 
தலைவராக என். அழகர்சாமி,செயலாளராக எம்.ஓ.சாகுல் ஹமீது, உபதலைவராக கே.ஆர்.பிரபாகரன், இணைச்செயலாளராக ஆர்.தாமஸ், பொருளாளராக  ஆர்.எம்.மாணிக்கம், செயற்குழு உறுப்பினர்களாக கே.வெங்கடேசன், ஜி.குணசேகரன், சி. காளிஸ்வரன், ஏ.ஆர்.எஸ்.மணி, ஆர்.எம்.வீரப்பன், எஸ்.சரவணராஜா, எல்.சேகர், எஸ்.பி. செல்வம், ஆர்.ரமேஷ், வி. ஞானதேசிகன்  ஆகியோர் பதவி ஏற்றனர்.
 
பின்னர் இந்த பொதுக் குழு கூட்டத்தில்  
 
நடிகர், நடிகைகளின் சம்பளத்தை குறைக்க வேண்டும். ஓ.டி.டி.யில் புதிய திரைப்படங்களை ஆறு வாரங்கள் கழித்து வெளியிட வேண்டும். 
 
தமிழக அரசு திரையரங்குகளுக்கு விதித்த காம்பவுண்டிங் வரி 8 சதவீதத்தை முற்றிலும் நீக்க வேண்டும் எனதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘தலைமைச் செயலகம்’ படத்தில் தனது சிறந்த நடிப்பிற்காக நடிகர் நிரூப் நந்தகுமார் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்