Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தொலைக்காட்சி ? – ரங்கராஜ் பாண்டேவின் அடுத்த நகர்வு !

Webdunia
சனி, 28 டிசம்பர் 2019 (07:56 IST)
சில காலம் தொலைக்காட்சிகளை விட்டு விலகி இருந்த ரங்கராஜ் பாண்டே மீண்டும் தொலைக்காட்சி ஒன்றில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தந்தி டிவியின் முகமாக  இருந்த ரங்கராஜ் பாண்டே, அங்கு ஏற்பட்ட சில குளறுபடிகளால் வெளியேற்றப்பட்டார். அதன் பின் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனாலும் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததால் சாணக்யா என்ற யுடியூப் சேனலை தொடங்கினார்.

அந்த சேனலை ,வேந்தர் தொலைக்காட்சி சேனலுக்கும் ஒப்பந்தம் போட்டு இணைந்து பணியாற்றினார். ஆனாலும் இந்த கூட்டணி எதிர்பார்த்த அளவுக்கு பார்வையாளர்களை உருவாக்கவில்லை என சொல்லப்படுகிறது. அதனால் அங்கிருந்தும் பாண்டேவை வெளியேற்ற இருப்பதாக நிர்வாகம் நினைப்பதாக சொல்லப்பட்ட வேளையில் பாண்டே தனது டிவிட்டரில் ‘வேந்தர் தொலைக்காட்சியுடனான ஒப்பந்தம் நவம்பர் மாதத்தோடு முடிகிறது’ எனத் தெரிவித்துள்ளார். பெரிதாக சினிமா வாய்ப்பும் இல்லாத அவர் அடுத்ததாக என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி எழுந்தது.

இப்போது அவர் நியூஸ் 7 தொலைக்காட்சியில் சேரப்போகிறார் என சொல்லப்படுகிறது. ஆனால் இந்த தகவலை நியுஸ் 7 நிர்வாகமோ, ரங்கராஜ் பாண்டேவோ இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments