Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திமுக vs அதிமுக: யாருக்கு எங்கு வெற்றி? வெளியானது கருத்து கணிப்பு முடிவுகள்!

திமுக vs அதிமுக: யாருக்கு எங்கு வெற்றி? வெளியானது கருத்து கணிப்பு முடிவுகள்!
, திங்கள், 20 மே 2019 (10:13 IST)
தமிழகம் மற்றும் புதுவையில் நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக மற்றும் திமுக எந்தெந்த தொகுதியில் வெற்றி பெரும் என கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது. 
 
இறுதிகட்ட மக்களவை தேர்தல் நேற்று முடிந்த நிலையில் நேற்று மாலை தேசிய மற்றும் மாநில ஊடகங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வரிசையாக வெளியிட்டன. பெரும்பாலும் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அந்தவகையில் தந்தி டிவி நடத்திய கருத்து கணிப்பில் எந்தெந்த தொகுதிகளை திமுக மற்றும் அதிமுக பிடிக்க வாய்ப்பு உள்ளது,  இழுபறி உள்ள தொகுதிகள் எவை என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 
webdunia
திமுக கூட்டணி வெற்றி தொகுதிகள்: 
மத்திய சென்னை, வட சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கரூர், ஈரோடு, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, திண்டுக்கல், நீலகிரி, தூத்துக்குடி. மொத்தம் 19 தொகுதிகள். 
 
அதிமுக கூட்டணி வெற்றி தொகுதிகள்:
திருவள்ளூர், கிருஷ்ணகிரி, சேலம், பொள்ளாச்சி, தேனி, திருப்பூர். மொத்தம் 6 தொகுதிகள். 
webdunia
இழுபறியில் உள்ள தொகுதிகள்: 
கன்னியாகுமரி, அரக்கோணம், விழுப்புரம், ஆரணி, சிதம்பரம், கோவை, ராமநாதபுரம், தர்மபுரி, மதுரை, நாமக்கல், திருவண்ணாமலை, தென் சென்னை, திருநெல்வேலி, புதுச்சேரி.
 
தந்தி டிவி-யை தவிர்த்து புதிய தலைமுறை, நியூஸ் 18 தமிழ்நாடு ஆகிய தமிழக ஊடகங்களும் திமுக கூட்டணியே அதிக இடங்களில் வெல்லும் என கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளன. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செருப்பு வீசியவருக்கு பொன்னாடை? எச்.ராஜாவின் கேவலமான செயல்!