Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைவா வா! தலைமையேற்க வா! – ட்ரெண்டாகும் #ரஜினியே_எங்கள்_முதல்வர்

Webdunia
வியாழன், 12 மார்ச் 2020 (11:41 IST)
இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தனது திட்டம் குறித்து ரஜினிகாந்த் பேசியுள்ள நிலையில் அவரது ரசிகர்கள் அவர்தான் முதல்வராக வேண்டும் என ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்னர் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசிய ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தான் பதவிக்கு ஆசைப்படுபவனல்ல என்றும், தமிழகத்தில் நல்ல ஆட்சியையும், ஆட்சியாளர்களையும் கொண்டு வரவே கட்சி தொடங்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

தனது கட்சிக்கு முக்கியமான மூன்று விதிமுறைகளையும் அவர் அறிவித்துள்ளார். ஆனால் அவர் முதல்வர் ஆக தான் விரும்பவில்லை என கூறியுள்ளது அவரது தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியின் இந்த முடிவுக்கு ஒத்துக்கொள்ளாத அவரது ரசிகர்கள் ட்விட்டரில் #ரஜினியே எங்கள் முதல்வர் என்று ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

அனைத்து அரசியல் கட்சிகளிலும் உள்ள நடைமுறைகளுக்கு மாற்றான பல்வேறு விதிமுறைகளை ரஜினி தனது கட்சிக்கு விதித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலைக்கு பதிலா எம்.எஸ்.பாஸ்கர்தான் பாஜக தலைவரா இருக்கணும்! - கலாய்த்த எஸ்.வி.சேகர்!

எப்.ஐ.ஆரை கசிய விட்டது யார்? சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்..!

சென்னைக்கு கடைசி சுற்று மழை எப்போது? தமிழ்நாடு வெதர்மேன் அளித்த தகவல்..!

சமூக விரோதிகளை அடித்து துவைக்க வேண்டிய தலைவன்.. தன்னையே அடித்துக் கொள்வதா? - நடிகை கஸ்தூரி வேதனை!

கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு நாள்! நடிகர் விஜய்க்கு நேரில் அழைப்பு விடுத்த விஜயபிரபாகரன்!

அடுத்த கட்டுரையில்
Show comments