Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி பாமகவுடன் கூட்டணி.... தமிழருவி மணியன் தகவல் !

Webdunia
ஞாயிறு, 9 பிப்ரவரி 2020 (09:18 IST)
ரஜினி பாமகவுடன் கூட்டணி

2021 ஆம் ஆண்டு மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு ரஜினி கட்சி ஆரம்பிக்கிற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
இதன்படி வரும் ஏப்ரலில் ரஜினி கட்சி ஆரம்பிக்க இருப்பதாகவும் ஆகஸ்ட் மாதம் முதல் பொதுக் கூட்டத்தை அவர் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் செப்டம்பர் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று ரஜினி அறிவித்திருந்தாலும் திமுகவை சமாளிக்க மெகா கூட்டணியை அமைக்க அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 
 
இதுகுறித்து பிரபல சொற்பொழிவாளரும் காந்திய மக்கள் கட்சி தலைவருமான தமிழருவி மணியன் கூறியுள்ளதாவது :
 
வரும் ஏப்ரல் மாதம் ரஜினி காந்த் கட்சி தொடங்குகிறார்.  அதற்கென பிரமாண்ட மாநாடு நடத்தவுள்ளதாகவும், செப்டம்பர் மாதம் தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும் ரஜினியுடன் பாமக இணையும் எனவும், பாஜகவுடன் இணைவது பற்றி அவர்தான் முடிவு செய்வார் என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ரஜினி சிஏஏவுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருப்பதால் நிச்சயம் அவர் பாஜகவுடன் தான்கூட்டணி அமைத்து தேர்தலில் களம் காண்பர் என்று தகவல்கள் வருகிறது. அதேசமயம் பாஜக தலைவர்கள் ரஜினிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வரும் நிலையில், பெரியார் குறித்து சர்சைக்குரிய கருத்துக்கும், சிஏஏ ஆதரவு  தெரிவித்த ரஜினிக்கு எதிரான எதிர்க்கட்சியினர் கடும் விமர்சனங்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 
ஏற்கனவே, வரும் 2021 சட்டசபை தேர்தலில் களமிறங்குவதாக ரஜினி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments