Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏப்ரலில் ரஜினி கட்சி: கூட்டணியில் இணையும் கட்சிகள் குறித்த தகவல்

Advertiesment
ஏப்ரலில் ரஜினி கட்சி: கூட்டணியில் இணையும் கட்சிகள் குறித்த தகவல்
, ஞாயிறு, 9 பிப்ரவரி 2020 (08:36 IST)
ஏப்ரலில் ரஜினி கட்சி:
2021 ஆம் ஆண்டு மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு ரஜினி கட்சி ஆரம்பிக்கிற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
இதன்படி வரும் ஏப்ரலில் ரஜினி கட்சி ஆரம்பிக்க இருப்பதாகவும் ஆகஸ்ட் மாதம் முதல் பொதுக் கூட்டத்தை அவர் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் செப்டம்பர் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று ரஜினி அறிவித்திருந்தாலும் திமுகவை சமாளிக்க மெகா கூட்டணியை அமைக்க அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ரஜினி கட்சியின் கூட்டணியில் பாமக மதிமுக மற்றும் தேமுதிக இணைய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் டிடிவி தினகரன் கட்சியை எந்த காரணத்தை முன்னிட்டும் கூட்டணியில் இணைக்க ரஜினி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது
 
ரஜினி கட்சியின் கூட்டணியில் இணையாவிட்டாலும் ரஜினி கட்சிக்கு மறைமுகமாக பாஜக ஆதரவு கொடுக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் அதிமுக மற்றும் திமுகவின் முக்கிய தலைவர்கள் ரஜினி கட்சியில் இணைய தயாராக இருப்பதாகவும் ரஜினி கட்சி ஆரம்பிக்கும் முதல் நாளிலேயே அவர்கள் அந்த கட்சியில் இணைய அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது
 
கடந்த 20 ஆண்டுகளாக ரஜினி அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவரது ரசிகர்களுக்கு வரும் ஏப்ரல் மாதம் ரஜினி கட்சி தொடங்க இருப்பதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெல்லி புரோஜக்ட் வெற்றி: சென்னைக்கு வருகிறார் பிரசாந்த் கிஷோர்