Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டெல்லி புரோஜக்ட் வெற்றி: சென்னைக்கு வருகிறார் பிரசாந்த் கிஷோர்

Advertiesment
டெல்லி புரோஜக்ட் வெற்றி: சென்னைக்கு வருகிறார் பிரசாந்த் கிஷோர்
, ஞாயிறு, 9 பிப்ரவரி 2020 (07:25 IST)
டெல்லி புரோஜக்ட் வெற்றி: சென்னைக்கு வருகிறார் பிரசாந்த் கிஷோர்
டெல்லி சட்டமன்ற தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்த நிலையில் அங்கு காங்கிரஸ் பாஜக மற்றும் ஆம் ஆத்மி என போட்டி நடந்தது. இந்த தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்கு பிரசாந்த் கிஷோர் நிறுவனம் வேலை செய்தது என்பது தெரிந்ததே 
 
பிரசாந்த் கிஷோர்  மற்றும் அவரது குழுவினர் வகுத்துக் கொடுத்த திட்டங்களை பிரசாந்த் கிஷோர் தான் வகுத்து கொடுத்ததாகவும் அதிலும் குறிப்பாக பெண்களை கவர்வதற்கு இலவச மெட்ரோ ட்ரெயின் இலவச பேருந்து ஆகியவை பொது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
அமித்ஷாவின் அதிரடி அறிவிப்புகளையும் மீறி ஆம் ஆத்மி வெற்றி பெற இருப்பதற்கு முக்கிய காரணம் பிரசாந்த் கிஷோர் மூளை தான் என்று கூறப்படுகிறது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்திலும் ஆம் ஆத்மி தான் வெற்றி பெறும் என்றும் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதி கூட கிடைக்காது என்றும் கருத்துக்கணிப்புகள் வெளிவந்திருப்பது பிரசாந்த் கிஷோர் தந்திரங்களால் தான் என்று டெல்லி அரசியல் நிபுணர்கள் கூறி வருகின்றனர்
 
இந்த நிலையில் டெல்லி பணியை வெற்றிகரமாக முடித்துவிட்டு விரைவில் பிரசாந்த் கிஷோர் சென்னைக்கு வர இருப்பதாகவும் தமிழகத்தில் திமுக வுக்கு ஆதரவாக அவரது பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது டெல்லியில் மிகப்பெரிய வெற்றியை ஆம் ஆத்மிக்கு பெற்றுக்கொடுத்த பிரசாந்த் கிஷோர்  திமுகவுக்கும் அதே போன்ற வெற்றியை பெற்றுக் கொடுக்க முடியுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கால்நடை மருந்து வழங்கும் மருந்தகத்தை தொடங்கி வைத்தர் அமைச்சர் விஜயபாஸ்கர் !