Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாளை அதிசயம்-அற்புதம் நிகழலாம்: கமல் விழாவில் ரஜினி பரபரப்பு பேச்சு

நாளை அதிசயம்-அற்புதம் நிகழலாம்: கமல் விழாவில் ரஜினி பரபரப்பு பேச்சு
, திங்கள், 18 நவம்பர் 2019 (07:10 IST)
நேற்றும், இன்றும் நடந்த அதிசயம், அற்புதம் நாளையும் நடக்கலாம் என ‘கமல்ஹாசன் 60’ விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
நேற்று சென்னையில் ’கமல்ஹாசன் 60’ விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் பேசியதாவது: தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி நான்கு மாதம் அல்லது ஐந்து மாதங்களுக்கு  மேல் நீடிக்காது என்று அனைவரும் கூறினர். தமிழகத்தில் உள்ள 99 சதவிகித மக்கள் இதனை கூறினாலும், அதிசயம் நடந்தது, அற்புதம் நடந்தது, ஆட்சி தொடர்ந்து கொண்டே உள்ளது.
 
webdunia
எனவே நேற்று அதிசயம் அற்புதம் நடந்தது, இன்றும் அதிசயம் அற்புதம் நடந்தது, நாளையும் அதிசயம் அற்புதம் நடக்கும் என்று ரஜினிகாந்த் கூறினார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி நீடிக்கும் அற்புதம் போல் தனது ஆட்சியும் மலரும் என்று அவர் மறைமுகமாக கூறியதை கேட்டு விழாவுக்கு வந்திருந்த அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விவசாயியின் காய்கறிக்கடையை கார் ஏற்றி சேதப்படுத்திய அரசு அதிகாரி: பெரும் பரபரப்பு