Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கமல் பட ரீமேக்கில் விஜய்! லோகேஷ் கனகராஜூக்கு அதிர்ஷ்டம்!

கமல் பட ரீமேக்கில் விஜய்! லோகேஷ் கனகராஜூக்கு அதிர்ஷ்டம்!
, ஞாயிறு, 17 நவம்பர் 2019 (16:46 IST)
கமல் பட ரீமேக்கில் விஜய் நடிப்பதால், இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு சூப்பர் பம்பர் அதிர்ஷ்டம் அடித்துள்ளதாக கோலிவுட் திரையுலகில் பரபரப்பான பேச்சு தற்போது நடைபெற்று வருகிறது 
 
தளபதி விஜய், தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்றும், அந்த திரைப்படம் தற்போது ’தளபதி 64’ என்று அழைக்கப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் இந்த படத்தில் விஜய், கல்லூரி பேராசிரியராக நடித்து வருவதாகவும், கல்லூரி பேராசிரியருக்கு மாணவர்களுக்கும் இடையே நடக்கும் பிரச்சனை தான் இந்த படத்தின் மூலக்கதை என்றும் கூறப்படுகிறது 
 
webdunia
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் போது அதில் வரும் காட்சிகள் மற்றும் வசனங்களை கவனித்த தளபதி விஜய், இந்தப் படத்தின் வசனங்களும் ஒரு சில காட்சிகளும் கமல்ஹாசன் நடித்த ’நம்மவர்’ படத்தின் சாயல் போல் இருப்பதை இயக்குனரிடம் தெரிவித்திருக்கின்றார்
 
இதனை அடுத்து இந்த படத்திற்கு பின்னால் ஏதும் பிரச்சனை வராமல் இருப்பதற்காக ’நம்மவர்’ படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிக் கொள்ளலாம் என்றும் அவர் ஆலோசனை கூறியுள்ளார்
 
இதனை அடுத்து கமல் அலுவலகம் சென்று இதுகுறித்து லோகேஷ் கனகராஜ் பேசியதாகவும், அப்போது லோகேஷ் கனகராஜ் திறமையை பார்த்து பாராட்டிய கமலஹாசன், தனது நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் ஒரு படத்தை இயக்குவதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது
 
தளபதி விஜய்க்காக ’நம்மவர்’ படத்தின் ரீமேக் உரிமையை வாங்க சென்ற இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு கமல்ஹாசன் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது சூப்பர்ஹிட் அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரண்டு வருடம் கழித்து முதல் படத்தை வெளியிடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!