அத்திவரதரை தரிசனம் செய்த ரஜினிகாந்த்!

Webdunia
புதன், 14 ஆகஸ்ட் 2019 (07:42 IST)
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு குளத்தில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அத்திவரதர், இந்த ஆண்டு குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு கடந்த சில நாட்களாக பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்
 
இந்த நிலையில் வரும் 16ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் அத்திவரதர், மீண்டும் குளத்தை வைக்கப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில் இன்றும் நாளையும் மட்டுமே பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்ய முடியும் நிலை ஏற்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று அதிகாலை அத்தி வரதர் தரிசனம் செய்ய காஞ்சிபுரம் வருகை தந்தார். அவருக்கு கோவில் அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். ரஜினிகாந்த் அத்தி வரதரை தரிசனம் செய்ய வந்திருப்பதாக செய்தி அறிந்ததும் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தை சேர்ந்த மக்கள் அதிக அளவில் அவரை காண கோவில் அருகே குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் தகுந்த பாதுகாப்புடன் ரஜினிகாந்த் அவர்களை அத்தி வரதரை தரிசனம் செய்ய வைத்து பத்திரமாக கோவில் அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரஜினிகாந்த்தின் மனைவி, மகள்கள் மற்றும் பேரன்கள் அத்தி வரதரை தரிசனம் செய்ய காஞ்சிபுரம் வந்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments