ஹேட்ஸ் ஆப் டு அஜித்: 'நேர் கொண்ட பார்வை' படத்தை பார்த்து ரஜினி கருத்து !

செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (07:39 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தமிழில் வெளியாகும் சிறந்த படங்களை பார்த்து தனது கருத்தை தெரிவிப்பதை கடந்த பல ஆண்டுகளாக ஒரு வழக்கமாக வைத்துள்ளார். அவர் பாராட்டிய படங்கள் பெரும்பாலும் மக்கள் மத்தியில் நல்ல ஆதரவையும் வசூல் அளவில் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அஜித்தின் 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியாகி கடந்த ஐந்து நாட்களாக வசூல் மழையை பொழிந்து கொண்டிருப்பது மட்டுமின்றி பெண்கள் உள்பட ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவை பெற்றுள்ளது. இதனையடுத்து நேற்று ரஜினிகாந்த் இந்த படத்தை பார்த்து 'இப்படி ஒரு கதையை தேர்வு செய்து நடித்த அஜித்துக்கு ஹேட்ஸ் ஆஃப் என்று பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் அஜித்துக்கு அவர் தொலைபேசியில் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
 
விஸ்வாசம்', 'பேட்ட' ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனதால் ரஜினி, அஜித் ரசிகர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது அஜித்தின் படத்தை பார்த்து ரஜினி பாராட்டியுள்ளது இருதரப்பு ரசிகர்களுக்கும் ஒரு இணக்கமான சூழலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் அஜித்தால் ஜெயம் ரவிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்