Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி…சாதி,, மத வெறியர்களின் கையில் சிக்காமல் இருப்பதே நல்லது – திருமாவளவன்

Webdunia
வெள்ளி, 30 அக்டோபர் 2020 (16:36 IST)
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நண்பர் ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது எனத் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினி மருத்துவர்களின் ஆலோசனைப் படி ஓய்வில் இருந்தபடியால் அவரால் இந்த ஆண்டில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடியவில்லை என அவரது பெயரில் போலி கடிதம் வெளியானாலும் அந்தக் கடிதத்தில் உள்ளது உண்மை தான் என ரஜினி கூறினார்.

இந்நிலையில், ரஜினி தனது ஆன்மீக அரசியல் குறித்த  கட்சி தொடங்குவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று அவரது வீட்டுக்கு முன் திரண்ட ரசிகர்கள் , அவரை அரசியலுக்கு வரும்படி அழைப்பு விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல், தமிழகத்தில் சில இடங்களில் ரஜினியை அரசியலுக்கு அழைப்பது போன்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ள்ளன.

அதில்,,  மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு…நீங்க வாங்க ரஜினி எங்கள் ஆதவு உங்களுக்குத்தான் …ஓட்டுன்னு போட்டா ரஜினிக்குதான் என தெரிவித்துள்ளனர்.

தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நண்பர் ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது. சாதி ,மத வெறியர்கள் கையில் சிக்காமல் நலமுடன் ஒதுங்கி இருப்பதே நல்லது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உண்டியலில் விழுந்த பக்தரின் ஐபோனை திருப்பி வழங்க நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு

நெல்லை நீதிமன்றம் முன் நடந்த இளைஞர் கொலை.. 5 பேர் கைது..!

இறங்கிய வேகத்தில் ஏறும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 480 ரூபாய் உயர்வு..!

கேரள கழிவு விவகாரம் எதிரொலி; குப்பை கொட்டுபவர்கள் மீது அடுத்தடுத்து வழக்குப்பதிவு!

வயநாடு இடைத்தேர்தல்: பிரியங்கா காந்தி வெற்றியை எதிர்த்து பாஜக வேட்பாளர் வழக்கு..!

அடுத்த கட்டுரையில்
Show comments