Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’நீங்க வாங்க ரஜினி எங்கள் ஆதரவு உங்களுக்குத்தான்’: சென்னையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

Advertiesment
’நீங்க வாங்க ரஜினி எங்கள் ஆதரவு உங்களுக்குத்தான்’: சென்னையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
, வெள்ளி, 30 அக்டோபர் 2020 (10:51 IST)
’நீங்க வாங்க ரஜினி எங்கள் ஆதரவு உங்களுக்குத்தான்’
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் அரசியல் கட்சி தொடங்கி அரசியலில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த 2 நாட்களாக வைரலாகி வரும் அவர் பெயரில் வெளியான கடிதமும் நேற்று அவர் பதிவு செய்த டுவிட்டும் ரஜினி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது 
 
உடல் உடல் நிலை காரணமாக ரஜினி அரசியலுக்கு வருவது சந்தேகம்தான் என்ற தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் அதே நேரத்தில் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள உடல்நிலை குறித்த தகவல்கள் உண்மை என்று மட்டும்தான் அவர் கூறினாரே தவிர அரசியலுக்கு வரமாட்டேன் என்று கூறவில்லை என்றும், கண்டிப்பாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்
 
மேலும் ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்ற நம்பிக்கையை தனது எதிரிகளுக்கு ஏற்படுத்தி விட்டு திடீரென தேர்தலுக்கு ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு முன்பு அரசியலில் குதிக்க அவர் திட்டமிட்டு இருப்பதாகவும் ஒரு தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது 
 
இந்த நிலையில் இன்று காலை முதல் சென்னையில் ரஜினிக்கு ஆதரவாக போஸ்டர்கள் பல இடங்களில் ஒட்டப்பட்டிருக்கிறது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு, நீங்க வாங்க ரஜினி, எங்கள் ஆதரவு உங்களுக்கு தான். ஓட்டு போட்டா ரஜினிக்குதான் என்ற வாசகங்கள் அந்த போஸ்டரில் உள்ளது.  இந்த போஸ்டரால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏ ஆர் ரஹ்மான் இசையில் மீண்டும் பாடும் தனுஷ் – டிவிட்டரில் வெளியிட்ட புகைப்படம்!