7 மாவட்டங்களில் குளிர்விக்க வரும் மழை! எந்தெந்த மாவட்டங்களில்? - வானிலை ஆய்வு மையம்!

Prasanth Karthick
திங்கள், 5 மே 2025 (08:11 IST)

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் நேற்று இரவு முதலாக நல்ல மழை பெய்து வரும் நிலையில் இன்றும் 7 மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தமிழகத்தில் கோடை வெயில் நிலவி வரும் நிலையில் பல பகுதிகளிலும் வெப்பம் அதிகரித்துள்ளது. அக்கினி வெயில் தொடங்க உள்ள நிலையில் ஆங்காங்கே குளிர்விக்கும் விதமாக மழையும் பெய்து வருகிறது. நேற்று சென்னை தொடங்கி, டெல்டா மாவட்டங்கள் வரை இரவு நேரத்தில் லேசான மழை பெய்தது. இந்நிலையில் இன்றும் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

அதன்படி, இன்று காலை நேரத்தில் நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாக்குமரி உள்ளிட்ட மாவட்டங்களின் சில பகுதிகளிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 

கொளுத்தும் வெயிலுக்கு நடுவே ஆங்காங்கே மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10வது மாடியில் உயிரை பணயம் வைத்த கள்ளக்காதலி.. கள்ளக்காதலனின் மனைவியிடம் இருந்த தப்பிக்க எடுத்த ரிஸ்க்..!

என்னை எதிர்த்து செங்கோட்டையன் போட்டியிடப் போகிறாரா? நயினார் நாகேந்திரன் கேள்வி..!

இன்று வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!

SIR கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இன்று கடைசி நாள்! 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

அடுத்த கட்டுரையில்
Show comments