Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த வாரத்தில் இடியுடன் கூடிய மழை – தமிழ்நாடு வெதர் மேன் கணிப்பு

Webdunia
திங்கள், 15 ஏப்ரல் 2019 (14:04 IST)
தமிழகத்தில் உள்ள உள் மாவட்டங்களில் இந்த வாரத்தில் இடியுடன் கூடிய மழைப் பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நிலவும் தட்பவெப்ப நிலைக் காரணிகளைக் கொண்டு வானிலையை வானிலை ஆய்வு மையம் கண்காணித்து அளிப்பது போல சில தனிநபர்களும் வானிலை அறிக்கைகளை மக்களுக்கு அறிவித்து வருகின்றனர். அதில் முக்கியமானவர் தமிழ்நாடு வெதர்மேன் என அறியப்படும் பிரதீப் ஜான்  முக்கியமானவர்.

தமிழகம் முழுவதும் கோடைக்காலம் வரும் முன்னரே வெய்யிலின் தாக்கம் அதிகமாகி வருகிறது. நகர்ப் பகுதிகளில் இப்போதே வெய்யில் சுட்டெரிக்க ஆரம்பித்துள்ளது. இன்னும் அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியைத் தொட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கோடை மழைக் குறித்து பேசியுள்ள வெதர்மென் தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘தமிழகத்தில் கோடைமழைக்கான அறிகுறிகள் தொடங்கிவிட்டன. இந்த கடற்கரையில் இருந்து தள்ளியுள்ள உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை மழைக்கு வாய்ப்பில்லை.

ஆனால், வடமாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் போன்ற மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழைக்கான வாய்ப்புள்ளது. ஆனால் இந்த மழையை பயங்கர மழை என்று கணிக்க முடியாது. ஆங்காங்கே பெய்யும்.

நீலகிரி, தேனி, திண்டுக்கள் உள்ளிட்ட மலையோர மாவட்டங்களில் தொடர்ந்து 2,3 நாட்கள் கனமழை பெய்யும். இந்த மழைக்குக் காரணம் மேற்கில் உள்ள காற்றும் கிழக்கில் உள்ள காற்றும் மோதிக் கொள்வதும், இந்தியப் பெருங்கடலில் பூமத்திய பகுதியிலிருந்து நுழையும் காற்று ஏற்படுத்தும் தாக்கமும் ஆகும்.’ எனத் தெரிவித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments