Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

9 மாவட்டங்களில் 100 டிகிரி - லேசாக குறைந்த வெயில் !

Advertiesment
அனல் காற்று
, வெள்ளி, 5 ஏப்ரல் 2019 (10:17 IST)
தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் நேற்று வெயில் 100 டிகிரியைத் தொட்டுள்ளது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயில் கடுமையாக உள்ளது. பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் அக்னி நட்சத்திரம் வேறு வர இருக்கிறது. உச்சபட்சமாக தமிழகத்தின் சில பகுதிகளில் வெப்பநிலை 106 டிகிரி வரை பதிவானது.

தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வந்த வெயிலின் தாக்கம் நேற்று கொஞ்சம் குறைவாக இருந்தது. இது சம்மந்தமாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ’ நேற்று மாலை எடுக்கப்பட்ட வெப்பநிலை அளவின்படி அதிகபட்சமாக சேலத்தில் 103 டிகிரி, திருத்தணி, தருமபுரி, கரூர் பரமத்தி ஆகிய இடங்களில் தலா 102 டிகிரி, மதுரையில் 101 டிகிரி, வேலூர், திருச்சி, நாமக்கல், கோவை ஆகிய இடங்களில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி இருந்தது.’ எனத் தெரிவித்துள்ளது.

அடுத்து வரும் நாட்களில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்பநிலை 5 டிகிரி வரை உயரும் என தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லஷ்மி ஸ்டோரா ? கல்யாண வீடா ? – பிரச்சாரத்தில் கார்த்திக் சிதம்பரம் கலகல !