Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்யும் மாவட்டங்கள்: வானிலை எச்சரிக்கை..!

Mahendran
வெள்ளி, 20 டிசம்பர் 2024 (11:47 IST)
இன்று மதியம் ஒரு மணி வரை சென்னை உள்பட மூன்று மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக மாறிய பின்னர் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
இந்த நிலையில், மழை குறித்த விவரங்களை அவ்வப்போது வெளியிட்டு வரும் சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் மதியம் வரை எந்தெந்த மாவட்டங்களில் என்ற விவரத்தை  அறிவித்தது. 
 
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் மதியம் ஒரு மணி வரை லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த இரண்டு நாட்களாக, சென்னை உள்பட நான்கு மாவட்டங்களிலும் மழை பெய்து வரும் நிலையில், இன்றும் மழை நீடிக்கும் என்பது இந்த வானிலை அறிவிப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பழனி முருகன் கோவிலில் கட்டண தரிசனம் ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!

தேர்தல் நேரத்தில் மட்டும் தான் மக்கள் மீது கரிசனமா? தவெக தலைவர் விஜய் கேள்வி..!

அம்பானி வீடு இருப்பது வக்பு வாரிய நிலத்திலா? வக்பு சட்டத்தால் அம்பானிக்கு எழுந்த சிக்கல்!

டிரம்ப் வரிவிதிப்பு எதிரொலி: ஆசிய பங்குச்சந்தை எழுச்சி.. ஐரோப்பிய பங்குச்சந்தை வீழ்ச்சி..!

திமுக தேர்தல் வாக்குறுதி எண் 503 என்ன ஆச்சு? சிலிண்டர் விலை குறித்து முதல்வருக்கு அண்ணாமலை பதிலடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments