ஆஸ்திரேலிய தொடருக்கு நடுவே தோனி போலவே அஸ்வினும் ஓய்வை அறிவித்து பரபரப்பை உருவாக்கினார் அஸ்வின். டெஸ்ட் தரவரிசையில் பவுலராகவும் ஆல்ரவுண்டராகவும் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கும் அஸ்வினை வெளிநாட்டு தொடர்களின் போது அணி நிர்வாகம் ஒரு அறிமுக பவுலரைப் போல பென்ச்சில் உட்கார வைக்கின்றனர். அடுத்த இரண்டு போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு இருக்காது என அணி நிர்வாகம் தெரிவித்த பின்னர்தான் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதே கருத்தை அஸ்வினின் தந்தை ரவிச்சந்திரனும் வெளிப்படுத்தியிருந்தார். அவர் “இந்த முடிவை நாங்கள் எதிர்பார்த்துதான் இருந்தோம். ஏனென்றால் அணிக்குள் அவர் கடந்த சில மாதங்களாக சில அவமானங்களை சந்தித்தார்” எனக் கூறியிருந்தார்.
இதையடுத்து அஸ்வின் “என் தந்தைக்கு ஊடகங்கள் முன்னர் பேசும் பயிற்சி இல்லை. டே பாதர் என்னடா இதெல்லாம். நீங்கள் மிகவும் தந்தைதனம் மிக்க ஸ்டேட்மெண்ட் கொடுத்துள்ளீர்கள். அதனால் என் தந்தையை மன்னித்துவிடும்படி கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.