Publish Date: Fri, 20 Dec 2024 (10:45 IST)
Updated Date: Fri, 20 Dec 2024 (10:46 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் சமீப காலமாக குறைந்து கொண்டே வருவது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
நேற்று ஒரு கிராம் 65 ரூபாய் குறைந்த நிலையில் இன்று ஒரு கிராம் 30 ரூபாய் குறைந்திருப்பதாகவும் ஒரு சவரன் 240 ரூபாய் குறைந்து இருப்பதாகவும் வெளி வந்திருக்கும் தகவல் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்பதை தற்போது பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து ரூபாய் 7,040 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 240 குறைந்து ரூபாய் 56,320 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,683 எனவும் ஒரு சவரன் ரூபாய் 61,464 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 98.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 98,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது