8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. இன்று பள்ளிகள் விடுமுறை எங்கே?

Siva
திங்கள், 16 ஜூன் 2025 (08:00 IST)
இன்று தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், நாளையும் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
 
காற்றின் திசை மாற்றம் மற்றும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக, கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும்; தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேற்கண்ட எட்டு மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 
கனமழை காரணமாக, கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் பவன் குமார் அறிவித்துள்ளார். சென்னை உள்பட மற்ற அனைத்துப் பகுதிகளிலும் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 29 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நயினார் நாகேந்திரன் - எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை! அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பா?

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டால் சமையலறை கருவிகளுடன் தயாராக இருங்கள்: மம்தா பானர்ஜி ஆவேசம்

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments