Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை உள்பட 17 மாவட்ட மக்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Webdunia
திங்கள், 20 நவம்பர் 2023 (17:06 IST)
சென்னை உள்பட 17 மாவட்டங்களில் இன்று இரவு நல்ல மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். தற்போது கூட சென்னையின் பல இடங்களில்  லேசான மழை பெய்து வருகிறது. 
 
இந்த நிலையில் செனை உள்பட 17 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை,  திருவண்ணாமலை, கடலூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மழையை எதிர்கொள்ளும் வகையில் ஏற்கனவே தமிழ்நாடு அரசின் மீட்புத்துறையினர் தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரம் முழுவதும் நெகட்டிவ்.. இன்றும் பங்குச்சந்தை சரிவு.. முதலீட்டாளர்கள் அச்சம்..!

சிறையில் உள்ள சவுக்கு சங்கர் மீது இன்னொரு வழக்கு: மீண்டும் கைது செய்த போலீசார்..!

6 ஆண்டுகளுக்கு பின் பேருந்து கட்டணம் உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

பொங்கல் தினத்தில் யுஜிசி நெட் தேர்வு தேதிகள் அறிவிப்பு.. கடும் எதிர்ப்பு கிளம்புமா?

சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

அடுத்த கட்டுரையில்
Show comments