Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராகுல் காந்தி தமிழகத்தில் போட்டி ! – வருவாரா ? வெல்வாரா ?

ராகுல் காந்தி தமிழகத்தில் போட்டி ! – வருவாரா ? வெல்வாரா ?
, செவ்வாய், 12 பிப்ரவரி 2019 (10:32 IST)
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற வைக்க வேண்டுமென்று தமிழகக் காங்கிரஸ் தலைவர்கள் விரும்புவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில தேர்தல்களாக தமிழகத்தில் வீழ்ச்சியை சந்தித்து வரும் காங்கிரஸ் இந்த நாடாளுமன்றத் தேர்தலிலாவது தன்னைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதற்கேற்றவாறு கூட்டணிக் கட்சியான திமுக விடம் தொகுதிகளைக் கேட்டு வருகிறது. திமுக விடம் காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ள தொகுதிகளான கிருஷ்ணகிரி, விருதுநகர், பெரம்பலூர், வடசென்னை, தென்காசி, ஈரோடு, திருச்சி., கடலூர், விழுப்புரம் மற்றும் கன்னியாகுன்மரி ஆகியத் தொகுதிகளைக் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. இதில் பெரும்பாலானத் தொகுதிகளை திமுக காங்கிரஸுக்கு விட்டுக்கொடுத்து விடும் எனத் தெரிகிறது.

இதில் கன்னியாக்குமரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை நிறுத்தி வெற்றிப்பெற வைக்கவேண்டுமென தமிழகக் காங்கிரஸார் விருப்பம் கொண்டுள்ளனர். கன்னியாகுமரி வெகு நீண்டகாலமாக காங்கிரஸின் கட்டுப்பாட்டில் இருந்த தொகுதி. கடந்த ஆண்டு ஓகிப் புயலின் போது மக்களை உடனடியாக சென்று களத்தில் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் கூறினார். அதனால் அங்குள்ள மீனவ மக்களுக்கு ராகுல் காந்தி மீது நல்ல அபிப்ராயம் உள்ளதாகத் தெரிகிறது. இவற்றையெல்லாம் கணக்குப் போட்டுப் பார்த்து வெற்றிப் பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும் தொகுதியாகக் கன்னியாகுமரியை குறிப்பிட்டு ராகுலுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் வட்டாரத்தில் செய்திகள் உலாவர ஆரம்பித்துள்ளன.

இதுபோல நாட்டில் பல மாநிலங்களில் உள்ள தொகுதிகளின் பட்டியல் ராகுல் கைக்குச் சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் அவர் டிக் செய்யும் தொகுதியில் ராகுல் போட்டியிடுவார் எனத் தெரிகிறது. ஆனால் கன்னியாகுமரியை விட வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ள வடமாநில தொகுதிகளை விட்டிவிட்டு ராகுல் தமிழகத் தொகுதியில் போட்டியிடுவாரா என்ற சந்தேகம் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழாமலில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் நில அதிர்வு – ரிக்டர் அளவுகோலில் ?