Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஜினியின் முடிவில் சுயநலமா? லாரன்ஸ் கூறுவது என்ன??

Advertiesment
ரஜினியின் முடிவில் சுயநலமா? லாரன்ஸ் கூறுவது என்ன??
, புதன், 30 டிசம்பர் 2020 (09:22 IST)
ரஜினியின் அரசியல் முடிவு குறித்து ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு. 

 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி ஆரம்பிக்க போவது இல்லை என்றும் அரசியலில் குதிக்க போவதில்லை என்றும் தனது உடல் நலன் கருதி இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் எனவே ரசிகர்கள் தன்னை மன்னிக்கும்படி ஏற்று உருக்கமாக ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
 
ரஜினி அரசியலுக்கு வருவார் என்று 100% நம்பிக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியாக இருந்தாலும் அவரது உடல் நலனை கணக்கில் கொண்டு ரசிகர்கள் தற்போது ஆறுதல் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் ரஜினியின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், 
 
குருவே, நீங்கள் எடுத்த முடிவு 100 சதவீதம் சரி. மற்றவைகளை விட உங்களின் உடல்நலம் தான் எங்களுக்கு முக்கியம். உங்களை நம்புபவர்கள் மீது அக்கறை கொண்டு சுயநலமில்லா முடிவை எடுத்துள்ளீர்கள். நீங்கள் எப்பொழுதுமே அடுத்தவர்கள் மீது அக்கறை கொள்பவர். அது தான் உங்களை சிறந்தவர் ஆக்குகிறது. உங்களின் நலனுக்காக நான் ராகவேந்திரா சுவாமியை வேண்டுகிறேன். குருவே சரணம் என்று பதிவிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அன்டர்-ஸ்கிரீன் செல்பி கேமரா : அசத்த வரும் பிக்சல் 6 !