Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவுக்கு ரூ.1 கோடி நிதியுதவி - நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவிப்பு

Webdunia
வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (10:17 IST)
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பெரும் சேதத்தை சந்தித்துள்ள கேரள மாநிலத்திற்கு நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளார்.

 
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் உதவிகள் குவிந்து வருகின்றன. பல்வேறு மாநில அரசுகள், திரைப்பட பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் உதவிகளை செய்து வருகின்றனர்.
 
தமிழ் நடிகர்களில் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி, விக்ரம் விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்ட பலரும் இதுவரை நிதியுதவி அளித்துள்ளனர்.
 
நடிகர் விஜய் 70 லட்சம் நிதியுதவியாக அளித்துள்ளார். அதேபோல், கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த சுஷாந்த சிங் ராஜ்புத், கேரள மக்களுக்காக ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி அளித்துள்ளார்.
 
இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.1 கோடியை நிதியாக அளிக்க முன்வந்துள்ளார். வருகிற 25ம் தேதி கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து அவர் ரூ.1 கோடியை அவர் வழங்க இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. முடிவே இல்லையா? முதலீட்டாளர்கள் அதிருப்தி..!

அரசியலில் மூத்த தலைவர், இளைய தலைவர் என்றெல்லாம் எதுவும் கிடையாது: செங்கோட்டையன்

ரூ.5 லட்சம் வரதட்சணை கொடுத்த மணமகள் வீட்டார். ஒரே ஒரு ரூபாய் மட்டும் எடுத்து கொண்ட மணமகன்..!

திருப்பதியில் தங்க ஏடிஎம்.. வெங்கடாஜலபதி டாலரை எளிதில் வாங்கலாம்..!

யூடியூபில் பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ.. விசாரணைக்கு உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments