Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

8 பெண்கள் இல்லை: திருமண மன்னனின் கணக்கு நீள்கிறது

Advertiesment
8 பெண்கள் இல்லை: திருமண மன்னனின் கணக்கு நீள்கிறது
, செவ்வாய், 30 ஜனவரி 2018 (06:10 IST)
கோவையை சேர்ந்த புருஷோத்தமன் என்ற 57 வயது நபர், பணக்கார விதவை பெண்களை தேர்வு செய்து அவர்களிடம் நல்லவர் போல் நடித்து இரண்டாம் திருமணம் செய்து, பின்னர் அவர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டியதாக நேற்று பார்த்தோம். இதுவரை புருஷோத்தமனிடம் 8 பெண்கள் ஏமாந்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது அந்த கணக்கு அதிகரித்து கொண்டே வருகிறது

புருஷோத்தமனிடம் நடத்திய விசாரணையில் இதுவரை 11 பெண்கள் அவரிடம் ஏமாந்திருப்பதாகவும், இன்னும் சிலர் புகார் கொடுக்க தயங்குவதால் இவருடைய ஏமாற்று திருமணத்தின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

புருஷோத்தமனின் சொத்துக்கணக்கு, வங்கிக்கணக்கு ஆகியவற்றின் தகவல் திரட்டவே காவல்துறையின் ஒரு டீம் செயல்பட்டு வருவதாகவும், விரைவில் புருஷோத்தமனின் முழு பித்தலாட்டங்கள் வெளிவரும் என போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தினகரன் அணியில் 7 ஸ்லீப்பர்செல்கள்: எடப்பாடியின் அதிரடி