Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

57 வயதில் 8 பெண்களை திருமணம் செய்து மோசடி செய்த 'திருமண மன்னன்' கைது

Advertiesment
57 வயதில் 8 பெண்களை திருமணம் செய்து மோசடி செய்த 'திருமண மன்னன்' கைது
, ஞாயிறு, 28 ஜனவரி 2018 (22:59 IST)
கோவையை சேர்ந்த புருஷோத்தமன் என்ற 57 வயது நபர் மனைவியை இழந்தவர். இவருக்கு 20 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் இரண்டாம் திருமணம் செய்ய முடிவு செய்த புருஷோத்தமன், அங்கிருந்த திருமணம் தகவல் நிலையம் ஒன்றில் பதிவு செய்தார்

அந்த திருமண தகவல் நிலையில் புருஷோத்தமனிடம் கணவரை இழந்த பெண்கள் குறித்த தகவல்களை அளித்தது. அதில் பணக்கார பெண்களை தேர்வு செய்த புருஷோத்தமன், ஒன்றன்பின் ஒன்றாக 8 பெண்களை இரண்டாம் திருமணம் என்ற பெயரில் திருமணம் செய்து அந்த பெண்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டியதாக தெரிகிறது. இதற்கு அவருடைய மகளும் உடந்தை என்பது தான் கொடுமையானது

இந்த நிலையில் புருஷோத்தமனால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்போது அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கோவை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனக்கு தினகரனை விட எம்.எல்.ஏ பதவி முக்கியம்: தங்கத்தமிழ்செல்வன்