Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரெவி புயல் உருவாகுமா?

Webdunia
சனி, 28 நவம்பர் 2020 (12:34 IST)
தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.  
 
வங்க கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்த நிலையில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. பல இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்த நிலையில் வேளாண் நிலங்கள், பயிர்கள் வீணாகின. இந்நிலையில் தற்போது வங்க கடலில் அந்தமான் தீவுப்பகுதிக்கு தெற்கே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இந்நிலையில், தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இதன் காரணமாக வரும் 1, 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வி மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிபுயலாக மாறினால் 'புரெவி ' என பெயர் வைக்கப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments