புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சி! – மத்திய அமைச்சரவை முடிவு!

Webdunia
புதன், 24 பிப்ரவரி 2021 (13:34 IST)
புதுச்சேரியில் நாராயணசாமி ஆட்சி பெரும்பான்மை இழந்த நிலையில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற நிலையில் ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததால் அரசு பெரும்பான்மை இழந்தது. பெரும்பான்மை நிரூபிக்க இயலாததால் புதுச்சேரி அமைச்சரவை கலைக்கப்பட்டது.

இந்நிலையில் பதவியேற்க எதிர்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அவை மறுத்துவிட்டதால் ஆளுனர் தமிழிசை சௌந்தர்ராஜன் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வலியுறுத்தினார். இதுதொடர்பான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சியை அமைப்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று குடியரசு தினம்.. நேற்று முன் தினம் 10,000 கிலோ வெடிமருந்து பறிமுதல்.. குண்டு வைக்க சதியா?

ஓபிஎஸ் அணியின் கூண்டோடு காலி.. தவெகவில் இணைந்த முன்னாள் அதிமுக அமைச்சர்...!

தேர்தலில் தனித்து நின்றால் த.வெ.க எத்தனை % வாக்குகளைப் பெறும்? எலான் மஸ்க்கின் Grok கணிப்பு..!

விஜய் முன் தவெக நிர்வாகி கூறிய குட்டி ஸ்டோரி.. என்ன ஒரு அர்த்தமுள்ள விஷயம்..!

ஓட்டல் முன் அனாதையாக கிடந்த பச்சிளம் குழந்தை.. கடை திறக்க வந்தவருக்கு அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments