நாட்டில் பெட்ரோல் விலை உயர்வு குறித்து பேசிய பாஜக தலைவர் எல்.முருகன் கப்பல் வர தாமதமாவதாக பேசியதற்கு காங்கிரஸ் துணை தலைவர் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வந்த நிலையில் சமீப காலத்தில் பெட்ரோல் லிட்டர் ரூ.100 ஐ தாண்டி பல இடங்களில் விற்பனையாகி வருகிறது. பெட்ரோல் விலை உயர்வை தொடர்ந்து சரக்கு லாரிகள் வாடகை, விளைப்பொருட்கள் விலை என அனைத்தும் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இந்நிலையில் சில மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்தும் வருகின்றன.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய பாஜக தமிழக தலைவர் எல்.முருகன், கச்சா எண்ணெய் கப்பலில் வருவதால் தாமதாமவதாக பேசியது வைரலானது. எல்.முருகனின் கருத்தை கேலி செய்யும் விதமாக பதிவிட்டுள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் வாழப்பாடி ராமசுகந்தன் “கச்சா எண்ணெய் கப்பல் வருவதால் நேரமாகிறது அதனால் பெட்ரோல் டீசல் விலை கூடுகிறது என்று தமிழ்நாடு பாஜக தலைவர் பேட்டியில் கூறினார் .... குதிரை வண்டியில் கொண்டு வாருங்கள் கப்பலை விட வேகமாக வரும்” என்று குதிரை வண்டியின் படத்தையும் பதிவிட்டுள்ளார்.