Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல் கட்சியில் இருந்து விலகிய மேலும் ஒரு பிரபலம்!

Webdunia
வெள்ளி, 18 ஜூன் 2021 (08:58 IST)
தமிழகத்தில் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி முதல் முதலாக போட்டியிட்டது. இந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கவில்லை என்றாலும் ஓரளவுக்கு தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும் கமல்ஹாசன் உள்பட அக்கட்சியின் ஒருசிலர் எம்எல்ஏவாக சட்டமன்றத்தில் நுழைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது
 
ஆனால் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் உள்பட கமல் கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் தோல்வி அடைந்தது மட்டுமின்றி பெரும்பாலான வேட்பாளர்கள் டெபாசிட் கூட வாங்கவில்லை என்பது சோகமான நிகழ்வாக இருந்தது 
 
இந்த நிலையில் தேர்தலுக்கு பின்னர் கமல் கட்சியில் இருந்து பல பிரமுகர்கள் அடுத்தடுத்து விலகிய நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபலம் விலகியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆதிதிராவிட செயலாளராக இருந்த பூவை ஜெகதீஷ் என்பவர் தற்போது அக்கட்சியிலிருந்து விலகி உள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியில் ஜாதி பாகுபாடு அதிகம் இருப்பதாகவும் அதனால் அக்கட்சியிலிருந்து தான் விலகுவதாகவும் அவர் பேட்டி அளித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால், மோடி இன்னும் டீ விற்று கொண்டிருப்பார்: சித்தராமையா

எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது.. தவெக தலைவர் விஜய்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: பாராளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி..!

மணிப்பூர் கிளர்ச்சியாளர்களிடம் ஸ்டார் லிங்க் சாதனம் உள்ளதா? எலான் மஸ்க் விளக்கம்..!

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை மாதங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments