பேனரை தள்ளிவிட்ட காத்து மேல கேசு போடனும்: பொன்னையா சூப்பர்யா...

Webdunia
சனி, 5 அக்டோபர் 2019 (12:07 IST)
சுபஸ்ரீ மரணத்தில் பேனரை தள்ளிவிட்ட காத்து மீதுதான் கேஸ் போட வேண்டும் என பொன்னையன் கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது அதிமுக கட்சி பிரமுகரின் திருமணத்திற்காக வைக்கப்பட்ட பேனர் விழுந்ததில் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதனைத் தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்களும் நடிகர்களும் தங்களுடைய ரசிகர்கள் யாரும் தங்களுக்கு பேனர் வைக்ககூடாது என வலியுறுத்தினர்.
 
மேலும் எதிர்கட்சியினர் இதனை வன்மையாக கண்டித்தும் வந்தனர். இதனிடையே பிரேமலதா விஜயகாந்த், சுபஸ்ரீ உயிரிழப்பு எதிர்பாராத நிகழ்வு, சுபஸ்ரீ மீது பேனர் விழுந்ததும் லாரி வந்ததும் விதியே என கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இப்போது பொன்னையன் கூறியுள்ளது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
தனியார் தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், காத்து அடித்து பேனர் கீழே விழுந்தது. பேனர் வைத்தவரா பேனை தள்ளி சுபஸ்ரீயை கொன்றது? அப்படி கேஸ் போட வேண்டும் என்றால் காற்றின் மீதுதான் போட வேண்டும் என பேசியுள்ளார். 
 
இது குறித்து வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதை கண்ட பலர் அவர் திட்டியும் வருகின்றனர். இதோ அந்த வீடியோ... 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments